Gallery

Mobile Uploads


MUST SHARE…..
56 பெண்கள் இதுவரைக்கும் whisper, stayfree, etc.
உபயோகித்ததால் இறந்திருப்பதாக
செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
உண்மையா ….என தெரியவில்லை….
காரணம், அதிகபட்சமான பெண்கள் இதையே உபயோக
படுத்துகிறார்கள்
எனினும் இந்த Ultra Napkin களில் chemical கள் உபயோகிக்கப்
படுவதாகவும், இது வெளிவரும் திரவத்தை gel
நிலைக்கு மாற்றுவதாகவும், இதனால்
சிறுநீர்ப்பை மற்றும் கருப்பை புற்றுநோய்கள்
ஏற்படுகின்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.
Ultra pad கள் பயன்படுத்துபாவர்கள் 5
மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற
வேண்டும் அல்லது cotton pad களை பயன்படுத்துமாறும்
மருத்துவ ஆலோசனைகள் தெரிவிக்கிறது…
நேரம் நீடிக்கும் என்றால் இரத்தம் பச்சை நிறம்
அடைவதுடன் பக்றீரியா தொழிற்பாடு அந்த gel ல் இடம்
பெற்று உடல் மீண்டும் உள்ளே பெறுகின்றது.
எனவும்… செய்திகள் பரவலாக வருகிறது
எனவே மக்கள் நலன் கருதி இதை பகிர்கிறேன்…
இந்த செய்தியை பகிர வெட்கப்படத்தேவையில்லை ..
இதை பகிர்ந்து கொள்வதன் மூலம்
நமது சகோதரிகளுக்கு உதவிடுவோம் ..
#sanjana chayya

image


Must share…

தோழர்களே இதை முழுமையாக படித்து பிறருக்கும்
பகிரவும்……!

“நம் கண் முன்னே ஒரு கொடூரம்” – தமிழகத்தில்.
சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள சென்றாயன்
பாளையத்தில், 10 வயது சிறுமியை பாலியல்
பலாத்காரம் செய்து, கொலை செய்து, இறந்த
அக்குழந்தையின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிய
மரத்தில் கயிறு கட்டி தொங்க விட்டுள்ளனர் 5 மனித
மிருகங்கள்..
கடந்த பிப்ரவரியில் நடந்த இந்த கொடுரத்தை செய்த ஈன
பிறவிகள் 5 பேரும் இப்போது ஊருக்கு ஜாலியாக
இருக்க, இறந்த சிறுமியின் ஏழை குடும்பம் அந்த ஊரில்
வாழ முடியாமல் வெளியேறி சேலம்
ஆத்தூருக்கு அருகே மனதை வேதனையும்
இயலாமையும் வாட்ட கண்களில்
கண்ணிரோடு கூலி செய்து உயிர் வாழ்கிறது..
பணத்திற்காக எத்தனையோ வழக்குகளில் பொய்
சாட்சிகளை தயார் செய்து நிரபராதிகளை சிறையில்
தள்ளும் காவல் துறை, அதே பணத்திற்காக ஊரின்
நடுவே நடந்த இந்த கொடூரத்திற்கு யாரும்
சாட்சி சொல்ல வரவில்லை என்று காரணம் கூறி 3
மாதங்களாகியும் அந்த 5 பேருக்கும் எதிராக
குற்றபத்திரிகை தாக்கல் செய்யவில்லை,
அதையே காரணம் காட்டி அந்த ஈனப் பிறவிகள் 5 பேரும்
நீதி மன்றத்தில் ஜாமின் வாங்கி விட்டார்கள். போலிசார்
முழு மனதுடன் முயற்சித்திருந் தால் நிச்சயம்
சாட்சிகளோடு குற்றவாளிகளுக்க
கு தண்டனை வாங்கி தரமுடியும்.ஆனால ்
செய்யவில்லை காரணம்.
கொலை செய்யப்பட்ட சிறுமி “பூங்கொடி”
வேறு சமூகம், குற்றவாளிகள் வேறு சமூகம், அதில்
முக்கிய குற்றவாளியான “பூபதி” பாட்டாளி மக்கள்
கட்சியின் 13 வது வார்டு கவுன்சிலர், ஊருக்குள்
கந்து வட்டி தொழில்செய்பவன் , ஊரின் தாதா, பண
வசதி உள்ளவன், இந்த தகுதிகள் போதாத நம் நாட்டில்
குற்றம் செய்யவும், தண்டனையில்
இருந்து தப்பிக்கவும்.
இன்று அந்த குழந்தைக்கு நடந்தது நாளை நம்
வீட்டு குழந்தைக்கும் நடக்கலாம் என்ற
உண்மை தெரிந்திருந்தும் அந்த ஊரில் ஜாதிக்கும்,
பணத்திற்க்கும் கட்டுபட்டு யாரும் சாட்சி சொல்ல
வராமல், பாதிக்கப்பட்ட அந்த
குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது போல்
எந்த உதவியும் செய்யாமல், சிறு ஆறுதலும்
சொல்லாமல் ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
குழந்தை இறந்த சோகமும் ஊரார் ஒதுக்கி வைத்த
சோகமும் ஒரு புறம் இருக்க,
மகளை சின்னா பின்னமாக்கி கொன்ற பாவிகள் ஊரில்
கண்முன்னே சுதந்திரமாக நடமாடுவதை கண்டு,
இயலாமை வாட்ட அந்த ஏழை தந்தை இருக்கும்
இரண்டு குழந்தைகளையாவது உயிரோடு காப்பாற்ற
ஊரை விட்டு வெளியேறி வயிற்று பிழைப்பிற்காக
கட்டிட கூலி வேலை செய்து கொண்டிருக்கிறார்..
அந்த படிக்காத ஏழை தந்தை பரமசிவன் வார்த்தை படி……..
“ஊரில் யாரும் முகம் கொடுத்து ஒரு வார்த்தை கூட
பேசறது இல்லிங்க, இருக்கிற இரண்டு பிள்ளைகளும்
பயந்து பள்ளிகூடம் போக மாட்டேன்றாங்க, வேற
வழி இல்லாம அந்த ஊரை விட்டே வந்துட்டேங்க, என்
பிளளைய கொன்னவங்க
கண்முன்னே ஜாலியா சுத்துறத பாக்கும்
போது தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்கும்
என்கிற நம்பிக்கையே போச்சு.. இனி ஆண்டவன் தான்
ஏதாவது செய்யனும்.. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட
மட்டும் அந்த ஊருக்கு போறேன்.
இப்போதைக்கு அதுதான் எனக்கும் அந்த ஊருக்கும் உள்ள
உறவு” என கண்ணிரோடு சொல்கிறார்..
இத்தனை கொடுமைக்கு பின்னும் வாங்கிய
கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்கிற
நேர்மையோடு வட்டி கட்டும் அந்த படிக்காத
ஏழை தந்தைக்கு நீதி கிடைக்க வேண்டாமா..?
தோழர்களே நம் நாட்டில் ஏழைகளுக்கெல்லாம்
இருக்கும் ஒரே சொத்து நம்பிக்கை மட்டுமே.. அந்த
நம்பிக்கை பொய்யாக கூடாது……
ஒரு சிறு பெண்ணை பாலியல் பலாத்காரம்
செய்து கொலை செய்து விட்டு, பணத்தையும்,
அதிகாரத்தையும் கொண்டு சிறு தண்டனை கூட
இல்லாமல் தப்பிக் முடியும் என்ற
நிலை இருக்குமானால், இந்த நாட்டில்
நாளை எதுவும் நடக்கலாம்,
இதைபடித்து கொண்டிருக்கும் நம் வீட்டிலும்
ஒரு நாள் இதே போன்ற துயரம் நடக்க வாய்ப்பண்டு. .
இதை தடுக்க நம்மாலான ஒரு சிறு முயற்ச்சி இந்த
செய்தியை பலருக்கும் பகிருங்கள், அதன் பலனாக இந்த
செய்தி ஒரு நேரமையான
காவல்துறை அதிகாரியை, அல்லது ஒரு நீதிபதியை,
அல்லது ஒரு நேர்மையான அரசியல் வாதி மூலம்
முதல்வரையும் எட்டாலாம்.. எட்ட வேண்டும்.. இறந்த
குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும்.
முயற்ச்சிப்போம் தோழர்களே..
முடிந்த வரை இதை பகிரவும்……..!
#sanjana chayya

image


Good evening….
வாயும் வயிறுமாக இருக்கிறாள்!!!

பேச்சு வழக்கில் பெண்கள்
கருவுற்றிருப்பதை இப்படி குறிப்பிடுவார்கள்.
கரு உருவான உடனேயே முதலில் தோன்றும்
உறுப்பு இதயம்தான். பெண் கருவுற்ற
ஆறாவது வாரத்திலேயே இதயம் துடிக்க
ஆரம்பித்து விடும். அப்படி துடிக்கவில்லையெனில்
அது முத்துப்பிள்ளையாகும். அதாவது வெறும்
பிண்டமாகும். அதன் பிறகு அதை வளரவிடாமல…்
கலைத்து விடுவார்கள்.
இப்படி முக்கியமான உறுப்பாகத் திகழும்
இதயத்தை மையப்படுத்தி `வாயும் இதயமும்’
என்று குறிப்பிடாமல் ஏன் வாயும் வயிறும்
என்றார்கள்? மூளைச்சாவு ஏற்பட்டவரைக்கூட
கோமா நிலையில் வைத்திருக்க முடியும். ஆனால்
இதயம் நின்றுப்போன ஒருவரை உயிருடன் இருப்பதாக
கூறவே முடியாது. அவரை சவம் என்றுதான்
நொடியில் பெயர் மாற்றி வைத்து விடுகிறோம்.
இப்படி பல சிறப்புகள் கொண்ட
இதயத்தை குறிப்பிடாமல் கண்டதையும் பேசும்
வாயோடு ஏன் கருவை மையப்படுத்தினார்கள்?
காரணம் இருக்கவே செய்கிறது. வயிற்றில் இருக்கும்
கருவிற்கு உயிர் இருக்கும். உணர்வுகள் இருக்கும்.
கேட்கும் திறன் இருக்கும். பசிக்கும். தன்
அம்மாவை பாதிக்கும் அனைத்து விஷயங்களும்
அக்கருவையும் பாதிக்கும். ஆனால் பேச
முடியாது. சுயமாக சாப்பிட முடியாது.
பிறகு எப்படி சாப்பிடுகிறது?
தாய் உட்கொள்ளும் உணவுதான் குழந்தைக்கான
சாப்பாடு. அதுவும் எப்படி சாப்பிடுகிறது?
அம்மாவின் வயிறுதான் அக்குழந்தைக்கு வாயாக
இருக்கிறது. தாய் சாப்பிடும்
உணவு தொப்புள்கொடி வழியாக கருவிற்குப்
போகிறது. அதாவது தாயின்
வயிறானது குழந்தைக்கு வாயாக
இருக்கிறது என்பதைத்தான் `வாயும் வயிறுமாக
இருக்கிறாள்…’ என்று குறிப்பிட்டார்கள்.
மிகவும் நுட்பமாக
விஷயத்தை ஒரிரு வார்த்தையில் அடக்கிய நம்
மூதாதையர் அதிபுத்திசாலிகள்தானே.
`தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும்
வேறு’ என்ற பழமொழி இங்கே ஒப்புநோக்கத் தக்கது.
குழந்தைக்கும் சேர்த்து தாயே உண்டவள், குழந்தைப்
பெற்றதும் அவரவர் வயிற்றை அவரவர்தான்
பார்த்துக்கொள்ளவேண்டும்… ஒருவர்
பசிக்கு இன்னொருவர்
உண்ணமுடியாது என்பதைத்தான்
இப்படி குறிப்பிட்டார்கள்.
#Sanjana chayya

image


Good morning….
Must share…
நண்பர்களே,
கனத்த இதயத்தோடு நான் பதிவிடும் இந்த சரித்திர
சோகம்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்
இறுதி காலம் குறித்து பெரும்பாலான
மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல்
போனது வருந்தத்தக்கது.
தமிழனுக்கே உரியதாக சொல்லப்படும் தன்மான
உணர்வை உண்மையிலேயே கொண்டிருந்த
திரு வ.உ.சி அவர்கள் சுதேசி கொள்கையைமுன்னெட
ுக்கும் விதத்தில் உருவாக்கிய சுதேசி கப்பல்
தொழிலும் நலிவடைய, போராட்டத்தின் காரணமாக
சிறை சென்றதால் வழக்கறிஞராக பணியாற்றவும்
தடைவிதித்தது ஆங்கில அரசு.
1908 ஆம் ஆண்டு சிறை சென்ற வ.உ.சி அவர்கள் 1912
டிசம்பர் மாதம் விடுதலையானார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர்,
பெரம்பூர், என பல்வேறு இடங்களில் குடியேறினார்.
சென்னை, கோவை, ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி,
தூத்துக்குடி, என பல்வேறு ஊர்களில்
வாழ்ந்து பார்த்தார்.ஆனால் வறுமை அவரை வாழ
விடவில்லை..
சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு சிறிய வீட்டில் தன்
மகளோடு குடியேறினார்.ஒரு சிறிய
மளிகை கடையை துவங்கி நடத்தினார். வியாபாரம்
குறிப்பிடும் படி இல்லாமல் போகவே வீடு வீடாக
சென்று மளிகை பொருட்களின் தேவையை பட்டியல்
(லிஸ்ட்) எடுத்து வந்து தன் மகளின்
உதவியோடு அந்தந்த வீடுகளுக்கு விநியோகம்
செய்து அதில் கிடைத்த சொற்ப தொகையில்
வாழ்ந்து வந்தார்.
அரிசி விற்றார், மண்ணெண்ணெய் விற்றார், ஆனால்
தன்மானத்தை விற்கவில்லை.யாரிடமும்
கையேந்தவில்லை.
சுயராஜ்ய நிதியிலிருந்து திலகர் மாதந்தோறும்
அனுப்பி வைத்த 50 ரூபாய்
அவருக்கு ஓரளவு உதவியாக இருந்தது.
தென் ஆப்ரிக்க தமிழர்கள்
இதனை கேள்வி பட்டு ஒரு தொகையை வ.உ.சி யிடம்
சேர்க்குமாறு காந்தியிடம் கொடுத்தனுப்பினர
்.ஆனால் ஏனோ அது வ.உ.சி-க்கு வந்து சேரவில்லை.
“இப்போது இருக்கும் நிலையில் அந்த பணம் வேண்டாம்
என்று நான் சொல்லப்போனால் அது நான் எனக்கும் என்
குடும்பத்தார்க்கும் இழைத்த தவறாகிவிடும் ”
என்று வெட்கத்தை விட்டு காந்திக்கு கடிதம் எழுதும்
அளவிற்கு வ.உ.சி இருந்தார்..
அவர் இறுதி காலத்தில் எழுதி வைத்த உயில் கண்ணீர்
வரவழைக்கும். தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ்
ஜவுளி கடைக்கும், வன்னிய தெரு எண்ணெய்
கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன்
என்பதை சொல்லியிருந்தார்.
இப்படிப்பட்ட சரித்திரத்தை மறந்துவிடாதீர்கள்..
பகிருங்கள்…
#sanjana chayya

image


Good morning…..
கண்டிப்பாக பகிரவும் அனைவரும் அறியட்டும்!
MUST SHARE EVERY TAMILAN…
குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட
ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும்
ஒரு சில ஆங்கில வார்த்தைகளும்
உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
முதலில் யாரிந்த சாமியார்
என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க
“அகத்தியர்”. ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும்
யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த
பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.
தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால
அறிவியல் தொழில் நுட்பத்தைப்
பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம்
தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்
இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல்
சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000
ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன்
அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில்
நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.
“சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்”
புரியலை நா விட்டுடுங்க…, நீங்கள்
இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர்
அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற
அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,
“ஒரு மண்
குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர
தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப
வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள்,
பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி,
இரண்டு கம்பிகளை இணைத்தால்
மித்ரவருனசக்தியைப் பெறலாம்”
மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள்
தவமிருந்து கிடைக்கிற சக்தியா?
Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய்
கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில்
தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு,
தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால
படைப்புகளில் தேடலைத் தொடங்கினார்.
அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த
Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி)
ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப்
பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.
அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம்
மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப்
பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான
Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே)
அவர்களை அணுகினார்.
புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக
சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப்
படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன்
அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல்
செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப்
போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும்
ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள
புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல்
வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக்
கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும்
நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர
அவரும் களத்தில் குதித்தார்.
ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில்
கூறப்பட்டதைப்
போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும்
போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம்
சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட
அதை படிக்கையில் என்ன
அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும்
இது என்னவாய் இருக்கும் எனத் திணரும்
போது ஒரு சமஸ்கிருத அகராதியில் “மயிலின்
கழுத்துப் பகுதி” என்று இருந்ததைப் பார்த்தார்கள்.
உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில்
சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய்
இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள்
உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள்
எப்போது சாகும் என கேட்க
அவருக்கு கோபமே வந்துவிட்டது.
பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக்
கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ்
சொன்னார் “அது மயிலின் கழுத்து அல்ல மயிலின்
கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்”. இதைக்
கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது.
ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின்
கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்!
கண்டுபிடித்தாகிவிட்டது.
அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும்
தயாரானது. அந்த மின்
கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த
போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere
Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்!
வெள்ளைக்காரன் Electric current
என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர்
மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம்
பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.
இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட
விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர்
என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன்
என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற
பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின்
சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால்
இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க
மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில்
இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால்
மாபெரும் சக்தியை நாம் பெறலாம்.
எனவே அவ்வாறு பெறப்பட்ட
சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார்
அகத்தியர்.
என்னப்பா இது அந்த காலத்துல
மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள்
கூகுள் தளத்தில், பாக்தாத்
பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல
ஹிஸ்டரி சேனலின் “தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்’
தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக்
கூடும்.
இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல..
இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய்
சொல்லி முடித்து விடுகிறோம்..
அவர் மேலும் கூறுவது, இது போல 100
கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால்
அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும்
பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும்
தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில்
அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும்
தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல்
இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால
“electroplating” என்று சொல்லக் கூடிய
அதே முறையை தெள்ளத் தெளிவாக
விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம்
பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இப்போ போடுங்க ஒரு லைக்கையும், ஷரையும்.
குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த
தெளிவான புள்ளி விவரம்
கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000
ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500
ஆண்டுகளுக்கு முன்
வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர்
வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால்
இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம்
குறைந்தது 3500 முதல் 4000
ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால்
கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.
#sanjana chayya

image


தமிழர்கள் என்பவர்கள் யார் என்று தமிழர்கள் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.தமிழர்கள் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ , சமயத்தையோ, சாதியையோ சார்ந்தவர்கள் அன்று . அவர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுப் பழக்கத்தை அடிப்படையாக கொண்டவர்களும் அன்று. அவர்களுள் எண்ணற்ற பேதங்கள் உள்ளன. கடவுளை நம்பாத நாத்திகர்கள் முதற்கொண்டு இந்துவும், சமணர்களும் , பௌத்தர்களும், இஸ்லாமியரும் , கிறிஸ்துவரும், சைவ, வைணவ, சாக்த, கௌமார சமயத்தை தழுவியவர்களும்,இயற்கையை வழிபடுபவர்களும்இதில் அடக்கம். சமயங்கள் மதங்களை மறுத்து உயிர்களை வணங்கும் சமரச சன்மார்கிகளும் தமிழினத்தில் அடக்கம் . பல வகையான சமய மத நம்பிக்கைகள் , மூட நம்பிக்கைகள், பகுத்தறிவு கோட்பாடுகள் , இறை மறுப்பு கோட்பாடுகளை உள்ளடைகியது தமிழனம்.மாட்டிறைச்சி , ஆட்டிறைச்சி , எலி இறைச்சி சாப்பிடுபவர்கள்உட்பட, எந்த வகையான இறைச்சியையும் உட்கொள்ளாது புலாலை முற்றிலும் மறுத்தவர்கள் தமிழினத்தில் அடக்கம்.உணவும் , கடவுள் வழிபாடும் தனிமனித சுதந்திரத்திற்கு உட்பட்டது. இவைகள்காலத்திற்கு, அறிவு விளக்கத்திற்கு தகுந்தாற்போல் மாற்றம் பெரும், மாறும். இவைகளை வைத்து தமிழர்களை பிரிப்பது நமது அறிவின்மையை மட்டுமேகாட்டுகிறது.தமிழர்கள் என்பவர்கள் பரந்து பட்ட ஒரு பேரினம். இந்த இனமானது மேற்கூறிய எண்ணற்ற வேறுபாடுகளை கொண்டதானாலும், தமிழ் மொழி என்ற ஒற்றை அடையாளத்தை மட்டுமே பொதுவில் தாங்கி நிற்கின்றது. மொழியே நமக்கெல்லாம் இணைப்புப் பாலமாக உள்ளது . அதன் அடிப்படையில் தான் நாம் அனைவரும் கட்டமைக்கப் பட்டுள்ளோம். அதனால் இந்த வேறுபாடுகளை வைத்து தமிழினத்தைபிரித்துத் பார்க்காமல் , ஒருவருக் கொருவர் சண்டையிடாமல் , ஒருவர் நம்பிக்கையை மற்றவர் இகழ்ச்சியாக எண்ணாமல், தமிழ் மொழி, தமிழினம் என்றுஅடையாளத்தோடு கால ஓட்டத்தில் முன் நகர்வோம். வலிமையான தமிழ் சமுதாயம் படைப்போம்.
#sanjana chayya

image


Good evening…
Must share…..
ஜாக்கிரதை ATM மையங்களில் நவீன திருடர்கள்: உஷார் மக்களே! மக்களே!!மக்களே!!!
Bank ATMஅவசியம் படியுங்கள்…!!! நவீன திருடர்கள்…!!!ATM – ல் புதுவித திருடர்கள் அராஜகம் ஆரம்பித்துள்ளது. தனியார்டிவியில் சொன்னபடி கேரளாவில் இது போன்ற நூதன திருட்டு 300 முறைக்கும்மேல் வெவ்வேறு இடங்களில் நடந்துள்ளதாம்…!ATM சென்டர்க்குள் நாம் நுழையும் முன் ஒருவர் இருப்பார் MINI Stmt /Balance பார்த்துகொண்டு அல்லது வேறு எதையோ செய்து கொண்டிருப்பார்… நம்மை பார்த்ததும் எதோ பிரச்சினை போல நீங்க எடுங்க என்று அவர் வெளிலே போகாமல் உள்ளேயே தான் இருப்பார் (காரணம் அவர் முன்னே வந்தவர்) – பின்னவர் பணம் மெசினை விட்டு வெளியே வந்ததும் எடுத்து கொண்டு ஓடி விடுகிறார்… (பணத்தின் அளவை பொருத்து)…
1. தயவு செய்து Security இருக்கும் ATM மையத்திற்கு செல்லுங்கள்.
2. உள்ளே மற்ற ஆள் இருக்கும்போது உள்ளே நுழைய வேண்டாம் – அவர் வெளியே அனுப்பி விட்டு பணம் எடுங்கள்.
3. தனிதாக , ஊருக்கு ஒதுக்கு புற ATM மையத்திற்கு செல்ல வேண்டாம்.
4. அதிக பணம் எடுக்கும்போது துணைக்கு ஒருவருடன் செல்லவும்.
5. பணம் எடுத்ததும் வெளியே வந்து எண்ணி பார்க்க வேண்டாம்.
6. ATM / Bank வாசலில் உங்கள் கவனத்தை திசை திருப்ப தெரியாதவர் பேசினாலோ/ எதையாவது வீசினாலோ கவனம் சிதறாமல் இருக்கவும்.
7. பெண்கள் காவனமாக இருக்கவும் – கழுத்தில் கத்தி போன்றவை வைத்து மிரட்டினால் கொடுத்துவிடுங்கள்.. பிறகு எப்படியும் மாட்டி கொள்வார்கள்.
8. தனியாக உள்ள இடத்தில இரவு / அதிகாலை நேரத்தில் பணம் எடுக்க செல்ல வேண்டாம்.
9. சிறு பிள்ளைகளை வண்டியில் தனியாக உட்காரவைத்திவிட்டு ATM மினுள் போகவேண்டாம்.
10. ஏதேனும் பிரச்சனை /சந்தேகம் என்றால் உடனே வங்கியை தொடர்புகொள்ளவும்…!விழிப்புடன் கூடிய பாதுகாப்புடன் இருங்கள்…!
#Sanjana Chayya

image


Good evening….
MUST SHARE….
இதயமே உனக்காக ஒரு ஐந்து நிமிடம்!!

சிகரெட்டை பெருமளவில் விற்பனை செய்யகம்பெனிகள் செய்யும் ராஜதந்திரங்கள்!!

* பிராங்கோடிலேடர்ஸ் எனும் வேதிப்பொருள் விரைவாக டொபாகோ நுரையீரலை அடைய வழிவகை செய்கிறது
* நிகோடின் அதிகமாக காணப்படுவதால் மனிதன் விரைவில் அடிமையாக்கப்படுகிறான்
*இதில் கலந்திருக்கும் பொருள்களான லியூகோரைஸ் மற்றும் சாக்லேட் மாஸ்க்புகை பிடிப்பவருக்கு எளிதாகவும் மற்றும் புகை எளிதாக உள்ளே நுழைய முடிவதால் மனிதனின் தொண்டை அதனுடைய கடினத் தன்மையை அறிய முடிவதில்லை
*மிக அதிக அளவிலான நைட்ரோசைம்ஸ் உபயோகிக்கப்படுவதால் இது எளிதாக புற்றுநோயை உண்டாக்க வல்லது
*இதில் கலக்கப்பட்டிருக்கும் அம்மோனியா கலவை பொருள்கள் நிக்கோடின் விரைவாக மூளையை அடைய வழிவகை செய்கிறது
*இதன் மேலிருக்கும் பில்டரனாது மிகவும் வீரியம் மிக்கது இது உதட்டில் வெப்பத்தை உண்டாக்கி புண் மற்றும் காயங்களை உண்டாக்குகிறது
*இதில் கலக்கப்பட்டிருக்கும்”மெந்தால்”ஆனது வீரியத்தை குறைத்து புகை எளிதாக நுரையீரலை எந்த வித கடினமுமின்றி சென்றடைய உதவி செய்கிறது
*இதில் இருக்கும் மற்றொரு கலவையான லெவுனிக் அமிலமானது புகை பிடிக்க எளிதானதாகவும் மற்றும் தொண்டைக்கு எந்த வித எரிச்சலையும் உண்டாக்காமல்நுரையீரலை அடையும்.#sanjana chayya

image


சில நாட்களுக்கு முன் பெண் ஒருவருக்கு நடந்த
நிகழ்ச்சி இது.
அவர் வைத்திருக்கும்
மொபைல்க்குதேவை இல்லாத SMS மற்றும் தவறான
கால்கள் வந்துள்ளது. இவர் எவ்வளவு சொல்லியும்
கேட்காமல் தொடர்ந்து வந்துள்ளது.
வீட்டில்சொன்னால ் நீ இனி மொபைல்
பயன்படுத்தாதே என சொல்லி விடுவார்கள் என
பயந்து இவர் வேறுஎண் மாற்றி விட்டார் .
ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே என்னில்
இருந்து பிரச்னை.நம்பர் மாற்றியும் எப்படி இதுபோல
கால் ,SMS வருகிறது என குழம்பி போனார்.
தனது நண்பரிடம் என்ன செய்யலாம் என கேட்டார் .
அவருக்காக அவருடையநண்பர்கள ் துணையுடன்
விசாரித்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.
இவர் வழக்கமாக ரீ- சார்ஜ் செய்யும் இடத்தில் இவர்
நம்பரை கொடுத்துவிட்டு E.C பண்ண
சொல்லிவிட்டு போய் விடுவார் . இந்த
நம்பரை வைத்து அங்கு உள்ள சிலர் செய்த செயல்தான்
இது.
இதுபோல ஆபத்தில் நீங்கள் மாட்டாமல் இருக்க சில
வழிமுறைகள்
*முடிந்த வரை ரீ-சார்ஜ் கார்ட் வாங்கி ரீ –சார்ஜ்
செய்யுங்கள்
*E.C செய்யவேண்டிய நிலை வந்தால் முடிந்த
வரை நன்றாக தெரிந்த கடையில் மட்டும் செய்யவும்
இல்லை என்றால் உங்கள் சகோதரர்களை அல்லது ஆண்
நண்பர்களை விட்டு செய்ய சொல்லவும்
*பேருந்தில் அல்லது கூட்டமாக உள்ள இடத்தில்
சத்தமாக உங்கள் நம்பரை சொல்லாதிர்கள்
*தெரியாத நபர்களிடம் நம்பர் தராதீர்கள்.உங்க ள்
அனுமதி இல்லாமல் உங்கள் நண்பர்கள் உங்கள்
நம்பரை யாரிடமும் கொடுக்ககூடாது என
சொல்லுங்கள்
*தவறான SMS வந்தால் யார் என கேட்டு பதில்
அனுப்பாதிர்கள் , அப்படி அனுப்பினால் அதுமுலமாக
உங்களிடம் தொடர்ந்து தொடர்பு கொள்ள
முயற்சிப்பார்கள ்
*WRONG CALL வந்தால் உடனடியான
துண்டித்து விடுங்கள், அடிகடி வந்தால் வீட்டில்
உள்ளவர்களை அல்லது உங்களுக்கு நம்பிக்கையானஆண்
களை பேச சொல்லுங்கள்
*பேருந்தில் அமர்ந்து SMS அனுப்பினால் சுற்றுபுறம்
பார்த்து அனுப்புங்கள், நீங்கள்அனுப்பும ்
செய்தியை அடுத்தவர்கள் படிக்க வாய்ப்புள்ளது
*மொபைலை பழுது பார்க்க கொடுத்தால் அதில்
உள்ள SIM கார்டு மற்றும் Memory Card இரண்டையும்
கழட்டிவிட்டு கொடுக்கவும், இல்லைஎனில் நீங்கள்
அழித்த புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தையும்
திருப்ப எடுத்துவிடுவார்கள்
முக்கிய பின்குறிப்பு : இது பெண்களுக்கு மட்டும்
அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்..
#sanjana chayya

image


மங்கள
ஆராத்தி எடுப்பது ஏன்.?

விஞ்ஞான விளக்கம்.!
தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது,
ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில்
இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த
நடைமுறை வெறும் சடங்குக்காக
செய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாக
இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான
அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது.
இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.
தூரத்து பயணம்
முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம்
முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள்,
மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண்
ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும்
நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில்
தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில்
சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும்.
மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த
தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது.
இதை ஒரு பரந்த பாத்திரத்தில்
எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர்
எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3
முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.
ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற
சூட்சுமப் பகுதி இருக்கிறது.
மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச்
சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும
பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள்
புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல்,
வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய
திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர்
மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.
மஞ்சள் மற்றும்
சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும்
திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.
அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ
அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.
ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ
அணுக்களை அழித்து நம் நலன்
பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள்
பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும்
முன்பே ‘ஆரா’ சரீரத்தில் சேர்ந்துள்ள
திருஷ்டி மற்றும்
கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய
பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக்
கொண்டு போகும் வழக்கம் உள்ளது.
எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள்
அறிந்து சரியான பாவனையுடன்
செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும்
முழுமையாக இருக்கும்.
#sanjana chayya

image


Good morning…..
Must share…
ராஜ ராஜ சோழனின் சமாதி!

உலகிலேய மிகபெரிய யானைப்
படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் ,
தென்னிந்தியா முழுவதும் ,
தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த
மாமன்னன் ராஜ ராஜ சோழன்,1000 வருடமாக கம்பீரமாக
நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன்,உலகின்
முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும்
அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய
புகழை ,இப்படிப்பட்ட மாமன்னன்
சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில்
அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு
பக்கிரிசாமி எனும் விவசாயிதான் தினமும் மலர்
மாலையிட்டு வணக்கம் செலுத்தி வருகிறார்.
முடிந்த அளவு பகிருங்கள் யாராவது முன் வருவார்கள்.
#sanjana chayya

image


Good night….
ஆணியே புடுங்க வேணாம்!!!

மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?

கணவன்: பருப்பும் சாதமும்.

மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.

கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.

மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.

கணவன்: முட்டைப் பொரியல்?

மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.

கணவன்: பூரி?

மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.

கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல்
வாங்கிட்டு வரவா?

மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக்
கெட்டுப்போகும்.

கணவன்: மோர் குழம்பு?

மனைவி: வீட்ல மோர் இல்ல.

கணவன்: இட்லி சாம்பார்?

மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.

கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல
செஞ்சுடலாம்.

மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது.
பசி எடுக்கும்.

கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?

மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.

கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி!
#sanjana chayya

image


Good evening…..

மகள் : அப்பா அப்பா இந்தா அப்பா உனக்காக நான் சுட்ட
தோசை…

அப்பா : ஆஹா ருசியா இருக்குடா செல்லக்குட்டி…

மகள்: அம்மா சுட்ட தொசையவிடவா ருசியா இருக்க..?

அப்பா : ஆமா டா தங்கம்…

மகள் : பொய் சொல்லாதப்பா. அம்மா சுடுற
தோசை அழகா வட்டமா இருக்கும். நான்
சுட்டது பிஞ்சு போச்சு…

அப்பா : உங்க அம்மாக்கு என் மேல பாசமே இல்ல அதான்
அவ சுடுற தோசை வட்டமா இருக்கு, நான்
பிச்சு பிச்சு சாப்பிடவேண்டி இருக்கு. உனக்கு என்
மேல அதிக பாசம் இருக்கு அதான் நீ சுட்ட தோசைய
எனக்காக பிச்சு குடுத்துருக்க. நீ சுட்ட தோசையில
தான் டா குட்டி ருசி அதிகமா இருக்கு…
மகள் தவறாக செய்தால் கூட அதை ரசிபவர் தான் தந்தை.
நமக்காகத் தானே இத்தனை கடினப்பட்டு செய்கிறாள்
என்று உணர்ந்துகொள்வார்கள் மகளின் விடயத்தில்
மட்டும்…!
#sanjana chayya

image


Good evening……
Share to every tamilan.

மறைக்கப்பட்ட வரலாறுகள்
======================
“தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் – பழங்கற்கால
கற்கோடரிகள் 15,00,000 – (1.51 மில்லியன்) ஆண்டுகள்
பழமையானவை ! “
“கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம்
தமிழ் குடி!”
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் திரு ராபர்ட்
ப்ரூஸ் ஃபூட் என்னும் புவித் தரைத்தோற்ற வியலாளர்
பல்லாவரம் அருகே தரையில் கிடந்த ஒரு கல்லாலான
கருவியைக் கண்டெடுத்தார். இது பின்னர் வரலாற்றைப்
புரட்டிப் போடும் ஆய்வுகளை தொடங்கி வைத்தது.
இந்தியாவின் பழங்கால வரலாறுகள்
பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய
பெருமை இவரையே சாரும்.
http://www.antiquity.ac.uk/projgall/pappu297/
சென்னை பல்லாபுரத்தைத் தொடர்ந்து (பல்லாவரம்)
பூண்டிக்கருகில் அத்திரம் பாக்கம்
குடத்தலை (கொற்றலை/கொசத்தலை) ஆற்றுப்
படுகைகளிலும், குடியம் மலைப்பகுதிகளிலும்
கிடைத்த பழங்கற்காலக் கற்கோடரிகள், 2,00,000 –
ஆண்டுகள் பழமையானவை என (1893-1912 கி.பி.) சர்
ராபர்ட் புருசு பூஃட் (இந்திய பழங்கற்கால ஆய்வின்
தந்தை) அறிவித்தார்.
மைக்கேல் வுட் என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கிலேய
நாட்டின் வரலாற்றாய்வர் தனது “இந்தியாவின் கதை” (“
The Story Of India ”) ( http://www.pbs.org/thestoryofindia ) எனும்
வலைத்தளத்தில் 70,000 – 50,000 ஆண்டுகட்கு முன்னர்
இந்தியாவில் முதல் மனிதன் குடியேறினான்
என்று பதிவு செய்தார் ! பிற வரலாற்றாசிரியர்களும்
அவ்வாறே குறிக்கின்றனர். இது தமிழரின்
வரலாற்றை இருட்டடிப்பு செய்யும்
சூழ்ச்சியாகவே கருதப்படுகிறது.
சென்னையில் இருந்து சுமார் 60 கி.மி தொலைவில்
உள்ள திருவள்ளூரில் இருக்கும் இந்த அத்திரம்பாக்கம்
என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கற்கால
கருவிகளை . ஆய்வு செய்ததில் இவை சுமார் 10
இலட்சம் முதல் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு குறையாத
தொன்மை வாய்ந்தவை என்பது தெரிய வந்தது. மேலும்
இவ்வளவு தொன்மை வாய்ந்த கண்டுபிடிப்புகள்
இந்தியாவில் வேறெங்கும்
இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆய்வு செய்த
சாந்தி பப்பு என்னும் ஆய்வாளர் “Early Pleistocene presence of
Acheulian hominins in South India” என்ற ஆய்வு அறிக்கையில்
இதை வெளியிட்டார்.
இந்த விடயத்தை அறிந்ததும் இந்த ஆய்வுகள் குறித்த
மேலும் பல தகவல்களைப் பெற அங்கு விரைந்தோம்.
ஆனால் அங்கு விசாரித்ததில்
இப்படி ஒரு ஆய்வு நடக்கிறது என்பது அந்த கிராம மக்கள்
பலருக்குமே தெரியாதது வருத்தமளித்தது. மேலும்
இரு சக்கர வாகனம் கூட பயனிக்க முடியாத அந்த
காட்டிலும் நடந்து சென்று விடயம் தெரிந்த
ஓரிருவரிடம் வழி கேட்டுச் சென்றும் அந்த
இடத்தை அடைய முடியாமல் ஏமாற்றத்துடன்
திரும்பினோம். அதன் பிறகு இந்த
ஆய்வுகளை எடுத்து நடத்தும் நிறுவனத்திடம்
விசாரித்த போது. இந்த ஆய்வுகள்
நடத்துவது நிறுத்தப்பட்டு சில ஆண்டுகள்
ஆனது என்றார். ஆவலுடன் நாங்கள் ஏன் என்று கேட்ட
போது மத்திய அரசின்
அனுமதி கிடைக்கவில்லை என்று அவர்
கூறியது அதிர்ச்சி அளித்தது! இன்னும்
எத்தனை இரகசியங்கள் இப்படி இருளில் மூழ்கியதோ.#sanjana chayya

image


Good evening…….
MUST SHARE…….
Employment –
ஆன்லைனில்
பதிவு செய்வது எப்படி?
தெரிந்து கொள்வோம்
தமிழகத்தில்
இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில்
சென்றுதான் கல்வித் தகுதியைப்
பதிவு செய்ய முடியும் என்ற
நிலை இருந்து வந்த நிலையில், தற்போது
அனைத்துப் பணிகளையும்
வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில்
செய்து கொள்ள முடியும்.
ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில்
பதிவு செய்தவர்கள், இந்த இணைய
தளத்தில்
தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக்
கொள்ள முடியும்.
இன்று நாம் புதியதாக ஆன்லைனில்
பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th
(or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக
கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில்
இணையதள முகவரி http://www.tnvelaivaaippu.gov.in
என்ற இணையதளத்திற்கு சென்று
click here for new user ID registration
என்று இருக்கும் அதை கிளிக் செய்தால்
ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree
என்று சொடுக்கி அடுத்து வரும்
பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர்,
ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில்
புதியதாக ஒரு ID கொடுக்கவும்,
பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப
அட்டை
எண்ணையும் Image Code என்ற இடத்தில்
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ
கொடுத்து Save செய்தால்
உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும்.
அடுத்து வரும்
பக்கத்தில்
உங்களது Personal detail, Contact detail, Qualification
detail, Technical detail
ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால்
உங்களது Register Number
Create ஆகிவிடும்.
குறிப்பு 1 : Qualification detail
பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன்
இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன
விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக்
செய்து Save
கொடுக்கவும். இதே போன்று Technical Detailம்
செய்ய வேண்டும்.
குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும்
முடிவடைந்தவுடன் Home
பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card
என்று இருக்கும் அதை கிளிக்
செய்து பிரிண்ட் எடுத்து
கொள்ளலாம்.
குறிப்பு 3 : ஏதேனும் தவறாக
செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact
இருக்கும் அதில்
சென்று மாற்றி கொள்ளலாம்.
குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal
செய்து கொள்ளலாம்.
Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான்
இருக்கும்.
Register Number : RPD2013M00007502
வேலைவாய்ப்பு அலுலகத்தின்
குறியீட்டு எண்: ARD –
என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம்,
RAMANATHAPURAM )
பதிவு செய்த ஆண்டு : 2013
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல்
வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக
இருந்தால் முன்னதாக 4
பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.
User ID : RPD2013M00007502
Password : dd / mm / yyyy
கடவு சொல்லில் உங்களது பிறந்த
தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால
விரையமுமின்றி வீட்டில்
இருந்தபடியே ஆன்லைனில்
பதிவு செய்து கொள்ளலாம். பதிவில்
ஏதேனும் தவறுகள் இருப்பின்
சுட்டிக்காட்டுங்கள் திருத்தம்
செய்து கொள்கிறேன்.
#sanjana chayya.

image


வீறுகொண்டெழு தமிழா வீறுகொண்டெழுஉறக்கம் கலைக்கும் வேளையிதுபகைவனோ இறுமாப்பில்…கண்மூடி நகைத்துக் கிடக்கிறான்பகைமுடிக்கத்தானே உன் தோளும்தினவெடுத்துத் துடித்திருக்கவாகைமாலை தொடுத்துவைத்துவாடிப்போய் நும் பெண்டிர் நிற்கபதுங்கியது போதும் பாய்ந்துவாஉன் நாற்கால் பாய்ச்சலில்யுத்தமெல்லாம் முடிந்துவிடும்,அன்றோபுத்தன்மீதும் புலியுறங்கும்.

image


Good morning…..

இன்று நாம் அனைவரும் வட்டத்தின்
சுற்றளவை கணிப்பதற்கு 2πr அல்லது πd எனும்
சூத்திரங்களை பாவிக்கின்றோம். இது தமிழரின்
கண்டுபிடிப்பு என்று சொன்னால் உங்களால் நம்ப
முடியுமா??? கீழே பாருங்கள் நிச்சயம்
ஆச்சரியப்படுவீர்கள்.
வட்டத்தின் சுற்றளவை கணிப்பதற்கு கணக்கதிகாரம்,
காக்கை பாடினியம் போன்றவற்றில் சூத்திரம்
அமைக்கப்பட்டுள்ளது.
காக்கை பாடினியம்
****************************
பாடல் :-
“விட்டமோர் ஏழு செய்து
திகைவர நான்கு சேர்த்து
சட்டென இரட்டி செயின்
திகைப்பன சுற்றுத்தானே”
நிறுவல் :-
(பரிதி – ப, விட்டம் – வி, ஆரை – ஆ என வைத்தால்)
= (விட்டமோர் ஏழு செய்து) = வி/7
= (திகைவர நான்கு சேர்த்து) = வி+4வி/7
= (சட்டென இரட்டி செயின்) = 2[வி + 4வி/7]
(திகைப்பன சுற்றுத்தானே)
= 2[வி + 4வி/7
= 2[11வி/7]
= 2×11வி/7
= 22/7 x வி
தற்காலத்தின் படி 22/7 = π எனவும் வி=d (விட்டம்)
எனவும் கொண்டால்…
வட்டத்தின் சுற்றளவு = 22/7 x வி
= πd
(d = 2r ஆக) சுற்றளவு = 2πr
ஆக இன்று வட்டத்தின் சுற்றளவு காண பயன்படுத்தப்படு
ம் சூத்திரங்களை தமிழன் π
பயன்படுத்தாமலே கணித்துள்ளான்
என்பது தமிழருக்கு பெருமையே…..
அடுத்த பதிப்பில் கணக்கதிகாரத்தில் உள்ள சூத்திரத்தின்
படி வட்டத்தின்
சுற்றளவை நிறுவி பெருமைப்படுவோம்.

image


GOOD EVENING…..
1:LIKE …..1:SHARE.,
நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய
கோவில் கோபுரம். தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக்
கலைக்கு சான்று!
தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆயிரம்
அதிசயங்களை தனகத்தே கொண்டு 1000
ஆண்டுகளை கடந்து கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த
அளவு துல்லியத்துடன் பெரிய கோவிலை எழுப்பிய
சோழர்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை.
#sanjana chayya

image


g Photo
தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
பிரபாகரன் பற்றிய சுவாரஸ்யமான முக்கிய
குறிப்புக்கள், அனைவரும் அறிய பகிரவும்..
——-
அரிகரன் – இதுதான்
அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர்.
ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த
கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும்
கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ,
பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார்
அப்பா!
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி,
சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை,
சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான்
விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள்.
இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான்
அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி’ என்றார்கள்.
எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!
——————
1.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர்
பொ.சத்தியசீலன். “போலீஸ் நிலையங்களைத்
தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்” என்று இவரைப்
பார்த்து பிரபாகரன் கேட்க, “எடுத்தால் எங்கே வைப்பது”
என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான்
காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!
2.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ்
ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும்
மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம்
நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற
வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்.
3.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர்
பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப்
பையில் இருக்கும் பேனாவை இடது கையால்
பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும்
தொடர்ந்திருக்கிறது!
4.“ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?”
என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர்
கேட்டபோது பிரபாகரன் சொன்னது, “யாரும் அணியத்
துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும்
இதில் இருக்கிறேன்.”
5.“பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை.
மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும்
இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப்
புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட
ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால்,
அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம்
இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப்
பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில்
பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார்,
பாலசிங்கத்தின் மனைவி அடேல்!
6.அக்காவின் திருமணத்தையட்டி
தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான்
அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம்
கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர்,
நகை அணிவதில்லை!
7.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார்.
ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப்
புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம்
இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன்
முழுமையான போராளியாக முடியாது’
என்பது அவரது அறிவுரை!
8.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய
மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம்
இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள்.
அன்று மாலை மட்டும் தான் திரையில்
தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!
9.‘இயற்கை எனது நண்பன்;
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்;
வரலாறு எனது வழிகாட்டி’ என்ற வார்த்தைகளைத்தான்
அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!
10.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும்,
‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய
பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’
என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!
11.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய்
பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார்.
பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத்
தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!
12.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான்
அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன்
எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார
்!
13.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம்
கர்ணன். “தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும்
ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன்.
அவனை எப்போதும் நினைப்பேன்” என்பார்!
14.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட
போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட
மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும்
மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக
அறிவித்திருந்தார்!
15.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப்
புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய
ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத்
சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங்.
இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத்
தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!
16.அநாதைக் குழந்தைகள் (போரில்
பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான
பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப்
பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன்
அறிவுச் சோலை ஆகிய
காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத
அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய
போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!
17.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள்
இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்!
18.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது,
அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள்
விலகி இருந்தார்!
19.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற
முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான்.
இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்:
பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான்
அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!
20.தன் அருகில் இருப்பவர்
குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன்
பதில் இப்படி இருக்குமாம், “நான் தூய்மையாக
இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும்
மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என்
வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!”
“ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும்.
அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும்.
இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன்
என்று சொல்ல முடியும்?” என்றுஅடக்க மாகச்
சொல்வார்!
21.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில்
பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன்
இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால்,
உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார்.
எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக்
கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!
22.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால்
என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக்
கொல்லலாம்’ என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்
பிரபாகரன்!
#sanjana chayya

image


Good evening..

பண்டைத் தமிழர் வகுத்த எழுபருவ மகளிர்:
* பேதை (5 முதல் 7 வயது வரை)
* பெதும்பை (8 முதல் 11 வயது வரை)
* மங்கை (12 முதல் 13 வயது வரை)
* மடந்தை (14 முதல் 19 வயது வரை)
* அரிவை (20 முதல் 25 வயது வரை)
* தெரிவை ( 26 முதல் 31 வயது வரை)
* பேரிளம் பெண் (32 முதல் 40 வயது வரை).

image


Good evening…..

image


உலக அதிசயம் பிரமிடு பற்றிய தகவல் !…நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசியங்களில் மிக முக்கியமான ஒன்று பிரமிடு உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாதரகசியத்தை கொண்டுள்ளது. பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடைக்கிடைக்கவேஇல்லை. பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான ‘கிஸா’ பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்மமுடிச்சாகவே உள்ளது.தற்கால எகிப்து தலை நகர் கைரோவின் புற பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலக புகழ் பெற்றவை . உலகஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான,இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத விடையங்களை உள்ளடக்கியதுஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது .இவ்வளவு எடை கொண்ட கற்களை ஐநூறு அடி உயரத்திற்கு கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். சுண்ணாம்பு கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செயப்பட்டு க்ரநைட் சுண்ணாம்பு கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டன .இருபத்தி மூன்று லட்சம் சுண்ணாம்பு கற்கள் எவ்வாறுஅவளவு உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கபட்டன என்பதும், அத்தகைய பாலைவன பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று.புற கற்களில் வித்தியாசமான எழுத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளன இவை மட்டும் பதித்தால் பத்தாயிரம்பக்கங்கள் வரும் என்பது வராலாற்றுஆய்வலர்கள் கருத்து .கிசவில் உள்ள மூன்று பிரமிடுகளும்.பைதகராஸ் என்கிற கணித விதிகளிபடியும் ,பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின் நட்சத்திரங்களைகுறிக்கின்ற துல்லிய கோட்பாட்டில் அமைக்கபட்டுல்லதை ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர்.மற்றுமொரு அதிசய விடயம் என்னவென்றால் .உள்ளே வைக்கப்பட்ட உடல்கள் கெட்டு போகாமல் இருப்பதின் விந்தை தான். உள்ளே வைக்கப்பட்டிருந்த உடல்கள் கெடாமல் மாறாக முற்றிலும் உலர்ந்தநிலையில்உள்ளது.ஆராய்ச்சியாளர்களின்ஆய்வுக்கு பெரும்சவாலாக உள்ளது !இன்னும் முற்றிலுமாக பயன் பாடுகளை கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள் ,குருக்கும் நெடுக்குமாக செல்கின்ற சதுர துளைகளின் பயன் பாடுகள் மர்மங்கலகவே உள்ளன.இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இத்தகைய சதுர துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ளரோபோட்களை உள் செலுத்தி உலகம்முழுவதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக கண்டபோது.உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கபட்டிருந்ததை உலகம் கண்டு வியந்தது .இவற்றை திறக்கவும் அதற்குபின்புறம்உள்ள மர்மங்களை அறிந்து கொள்ளவும் தற்பொழுதும் ஆய்வு குழுக்கள் மும்முரமாக மனிதனின் அதிசய தக்க ஆற்றல் அறிவியலுக்கும் ஆட்படாத அதிசயங்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும்..இன்னும் பல நுற்றாண்டுகளை கடக்க இருக்கும் பிரமிடுகளை எண்ணி நாம் ஆச்சரியபடுவதில்தவறு ஒன்றும் இல்லை.பிரமிக்கத் தக்க முறையில் கட்டப் பட்டுள்ள பிரமிட் கூம்பகம் பண்டைக்கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்புப் பீடமாக மட்டும்நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது! பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப் பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், மருத்துவ ஞானத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன. எகிப்தில் கட்டப்பட்டுள்ள பிரமிக்கத்தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஓர் புதிரான வரைகணித [Hermetic Geometry] முறையில் திட்டமிட்டுக் கட்டப் பட்டதாகத் தெரிகின்றன! அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச்சிலரே. அவற்றில் நழுவிச் சென்ற சில கணித துணுக்குகளைத்தான்புராதன, அலெக்ஸாண்டிரிய கிரேக்க ஞானிகள் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறிய வருகின்றது. பிரமிட்களும் அயர்லாந்தில் இருக்கும் கற்சுமைத் தாங்கிகள் [Stonehenge, Ireland] போலக் கற்தூண் காலங் காட்டியாக [Megalithic Calendars] கருதப் படுகின்றன.இந்த பிரமிடுகளில் ஏராளமான மம்மிகள் கண்டு பிடிக்க பட்டு உள்ளதுமம்மிப்படுத்துதல் பற்றி …1. இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று, மரணக் கட்டிலில் அவரைக் கிடத்திப்பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் அவரை அலம்புவார்கள்.
2. உடலில் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பார்கள்.
3. நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டுக்கல் உப்பில் பதப்படுத்தப்படும்.
4. இருதயம் அறிவின் இருப்பிடமாகக் கருதப்பட்டதால் அது உடலுக்குள்ளேயே இருக்கும்.
5. ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து, மூளையை எடுத்துவிடுவார்கள்.
6. உடல் கல் உப்பால் மூடப்படும்.
7. நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி, அதன்மீது வாசனை எண்ணைகளைத் தடவுவார்கள். உடல் இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்திருக்கும்.
8. உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில் (canopic jars) வைக்கப்படும்.
9. உடலை பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.
10. மம்மி இப்போது அடக்கத்திற்குத்தயார்.
#sanjana chayya

image


இளைய தளபதி விஜய்க்கு இன்று (ஜூன் 22)
40வது பிறந்த நாள். விஜய் ரசிகர்கள்
நாடு முழுவதும் தங்கள் இளைய தளபதியின் பிறந்த
நாளை அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில்
கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். விஜய் பற்றிய
40 சுவையான தகவல்கள் இதோ…
1.
பெருசா ஜிம்முக்கு போயி அலக்கிட்டிக்றதே இல்லை.
அப்படி இருந்தும் அவரது இளமையின் ரகசியம் அன்பு.
“மற்றவர்கள் மீது அன்பு செலுத்தினாலே உடம்புல
இளமை தங்கிடும்” என்பார் விஜய்.
2. எந்த மாஸ்டர்கிட்டேயும் டான்ஸ்
கத்துக்கிட்டதில்லை. அப்புறம் எப்படி டான்சில்
பொளந்து கட்டுகிறார். கவனிப்பு. டான்ஸ் மாஸ்டர்
ஒரு முறை ஆடிக்காட்டினால்
எது எத்தனை கடினமான ஸ்டெப்பாக இருந்தாலும்
ஆடிவிடுவார்.
3. யாருடன் போட்டோ எடுத்தாலும்
தோளோடு இருக அணைத்துக் கொண்டுதான்
போட்டோ எடுத்துக் கொள்வார்.
4. படப்பிடிப்பில் யாருடனும் அதிகம் பேசமாட்டார்
நடிக்கிற கேரக்டர் பற்றித்தான் சிந்தித்துக்
கொண்டிருப்பார். மற்ற நேரங்களில் பாட்டு கேட்பார்.
புத்தகம் படிப்பார்.
5. விஜய்யுடன் அதிக படங்களில் காமெடியனாக
நடித்தவர் சார்லி
6. வெற்றி, குடும்பம், நான் சிகப்பு மனிதன், வசந்த
ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்க
பூமி படங்களில் குழந்தை நட்சதிரமாக
நடித்துள்ளார்.
7. ஹீரோவாக நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு.
முதல் ஹீரோயின் கீர்த்தனா.
8. விஜய்யின் ஆரம்ப கால படங்களின் ஹீரோயின்
சங்கவி. இருவரும் இணைந்து நடித்த ரசிகன் படம் 175
நாட்கள் ஓடியது. விஜய்யின் முதல்
வெள்ளிவிழா படம் அது.
9. குழந்தை நட்சத்திரமாக
இருந்தவரை ஹீரோவாக்கியது நாளைய தீர்ப்பு.
பிளேபாய் ஹீரோவாக நடித்தவரை செண்டிமென்ட்
ஹீரோவாக்கியது காதலுக்கு மரியாதை. ஆக்ஷன்
ஹீரோவாக்கியது பகவதி.
10. நடித்த மொத்த படங்கள் 56. அதிக நாள் ஓடிய படம்
கில்லி. அதிக வசூலைக் கொடுத்த படம் துப்பாக்கி.
11. காதலுக்கு மரியாதை படத்தில் நடிததற்காக
தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார்.
அதோடு எம்.ஜி.ஆர்.விருதும்,
திருப்பாச்சி படத்துக்கு சிறப்பு விருதும், தமிழக
அரசிடமிருந்து பெற்றார்.
12. ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு சண்டையோ,
நடனமோ கற்றுக் கொண்டதில்லை.
லயோலா கல்லூரியில் விஷ்காம்
படித்து முடித்தார்.
13. ரசிகன் படத்தில் “பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி…”
பாடலை முதன் முதலாக பாடினார். இசை தேவா.
கடைசியாக ஜில்லாவில் “கண்டாங்கி கண்டாங்கி…”
பாடினார் இசை டி.இமான். பாடிய மொத்த பாடல்கள்
23. அத்தனையும் ஹிட்.
14. இன்றைக்கு இந்தியில் டாப்பில் இருக்கும்
பிரியங்கா சோப்ராவின் முதல் ஹீரோ விஜய். நடித்த
படம் தமிழன். இவர்கள் தவிர பிபாசபாசு (சச்சின்),
ஹாசல் கரொவ்னி (ஜில்லா), அமீஷா படேல் (புதிய
கீதை), இலியானா (நண்பன்) ஆகிய பாலிவுட்
நடிகைளும் ஜோடியாக நடித்துள்ளனர்.
15. விஜய் குழந்தை நட்சத்திரமா நடித்த முதல் படம்
வெற்றி. அதற்காக வாங்கின சம்பளம் 500 ரூபாய்.
தற்போது நடித்து வரும்
கத்தி படத்திற்கு வாங்கியிருப்பதாக சொல்லப்படும்
சம்பளம் 15 கோடி.
16. சினிமாவில் நடிக்க வீட்டில்
எதிர்ப்பு கிளம்பியதால் ஒரு முறை லட்டர்
எழுதிவைத்து விட்டு சென்று விட்டார். பின்னர்
தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
17.
விஜய்க்கு பிடித்தது கவுண்டமணி காமெடியும்,
இளையராஜா பாடல்களும். காரில் இந்த இரண்டும்
கட்டாயம் இருக்கும்.
18. நீண்ட தூரம் காரில் பயணம் செல்வது ரொம்ப
பிடிக்கும். மனசு லேசாக வேண்டுமானால்
காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்.
19. அவருக்கு பிடிச்சது கருப்பு கலர் கார். கார்கள்,
கம்பெனிகள் நம்பர்கள் மாறினாலும் கருப்பு நிறம்
மட்டும் மாறாது.
20. பொதுவாக எல்லோரையும் “வாங்கண்ணா”
என்று அழைப்பார் ரொம்ப நெருக்கமானவர்களில்
இளையவர்களை “வாடா ராஜா” என்றும்
மூத்தவர்களை “வாங்க ராஜா” என்பார்.
கல்லூரி நண்பர்களை “மச்சி” என்று அழைப்பார்.
21. குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்த
அனைத்துமே சின்ன வயது விஜயகாந்த்
கேரக்டர்கள்தான்.
22. எளிய உடைகளே விஜய்யின் பேவரிட். குறிப்பாக
வெள்ளை சட்டையை விரும்பி அணிவார்.
23. தன்னை வைத்து படம் இயக்கி கஷ்டத்தில் இருக்கும்
இயக்குனர்களுக்கு தலா 5 லட்சம் கொடுத்து உதவிய
ஒரே நடிகர் விஜய்.
24. ஒவ்வொரு பிறந்த நாளின் போதும்
அம்மா அப்பாவை நேரில் சந்தித்து காலில்
விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்.
25. ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் படம்
வெற்றி பெற வேண்டும் என்பதற்காக
வேளாங்கன்னி சென்று பிரார்த்தனை செய்து விட்டு வருவார்.
26. தங்கத்தில் நகைகள் அணியும் வழக்கம் இல்லை.
27. தனக்காக மட்டும் இல்லாமல் பிற
நடிகர்களுக்காகவும் பின்னணி பாடியிருக்கிறார்
பெரியண்ணா படத்தில் சூர்யாவுக்காகவும்,
வேலை படத்தில் விக்னேசுக்காவும்
பாடியிருக்கிறார்.
28. அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில் ஹீரோவின்
பெயர் விஜய் என்றே இருக்கும். அவரது இயக்கத்தில்
அதிக படங்களில் நடித்தவர் விஜயகாந்த், அவர்
அறிமுகப்படுத்திய இசையமைப்பாளருக்கும் விஜய்
ஆண்டனி என்றே பெயர் வைத்தார். அந்த அளவிற்கு மகன்
மீது அப்பாவுக்கு பாசம்.
29. விஜய் படங்களுக்கு சம்பளம் வாங்காமல்
காஸ்ட்டியூம் டிசைனராக வேலை பார்ப்பவர்
மனைவி சங்கீதா
30. விஜய்க்கு இப்போது வீடியோ கேம் என்றால் உயிர்.
அவருக்கு வீடியோ கேம்களை கற்றுக்
கொடுத்தது மகன் சஞ்சய்.
31. உலகம் முழுவதும் சுற்றினாலும்
சென்னைக்கு அடுத்து விஜய்க்கு பிடித்த ஊர்
லண்டன். காதல் மனைவி கிடைத்த ஊர் என்பதால்
மட்டுமல்ல, லண்டனின் தூய்மைக்கு அவர் அடிமை.
32. குழந்தைகள் சஞ்சய், சாஷா என்றால்
விஜய்க்கு உயிர். அவர்களின் மழலை கால
பேச்சுக்களை ஆடியோவில்
பதிவு செய்து வைத்திருக்கிறார். குழந்தைகளின்
ஒவ்வொரு பிறந்த நாளையும் வீடியோவாக
எடுத்து அதன் கலெக்ஷன்களை சேர்த்து வருகிறார்.
33. எளிதில் உணர்ச்சி வசப்படாத விஜய் அம்மாவுடன்
ஒரு விளம்பரபடத்தில்
நடித்தபோது ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டார்.
34. தமிழ் நாட்டில் ரசிகர்
மன்றங்களை அமைப்பு ரீதியாக பலமாக
வைத்திருப்பது விஜய்தான். சென்னையில்
இருந்தால் மாதத்தில் இரண்டாவது மற்றும்
நான்காவது ஞாயிற்றுக்கிழமைய
ரசிகர்களை சந்திக்க ஒதுக்குகிறார்.
35. அழகிய தமிழ் மகன் படத்துக்கு பிறகு கத்தி படத்தில்
இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
36. நேருக்கு நேர், பிரண்ட்ஸ் படங்களில் சூர்யாவுடன்
நடித்தார். அதன் பிறகு நண்பன் படத்தில் ஜீவா,
ஸ்ரீகாந்தோடு நடித்தார்.
37. தெலுங்கு, இந்திப் படங்களில் நடிக்க வந்த
வாய்ப்புகளை தவிர்த்துவிட்டார். தமிழ்
படங்களே போதும் என்பது அவரது கருத்து.
ரவுடி ரத்தோர் படத்தில் பிரபு தேவா கேட்டுக்
கொண்டதற்காக அக்ஷய் குமாருடன்
ஒரு பாட்டுக்கு ஆடினார்
38. சூப்பர் ஸ்டார் ரஜினி வழியில் தனது உதவியாளர்
பி.டி.செல்வகுமாரை தனது அடுத்த படத்தின்
தயாரிப்பாளராக்கிவிட்டார்.
39. அதிகமான
இயக்குனர்களை அறிமுகப்படுத்தியது விஜய்தான்.
பேரரசு, ஜெகன், எழில், செல்வா, பரதன், ரமணா, ஜான்
மகேந்திரா, மாதேஷ், எஸ்.பி.ராஜ்குமார் உள்பட 22
பேர்.
40. விஜய் தன் பிறந்த நாளை எப்போதும் ஆடம்பரமாக
கொண்டாடுவதில்லை தனது பிறந்த நாளை உதவும்
நாளாக கொண்டாடுங்கள் என்று அறிவுறுத்துவார்.
இந்தாண்டு அவருக்கு 40வது பிறந்தநாள்
ஒரு முன்னணி தமிழ் வார இதழ் நடத்திய
கருத்து கணிப்பில் இளைய தளபதி விஜய் அடுத்த
சூப்பர் ஸ்டாராக வெற்றி பெற்றிருக்கிறார்.
இதுதான் அவருக்கு கிடைத்த முதல் பிறந்த நாள்
பரிசு.
நமது பரிசையும் அவருக்கு கொடுப்போம். அன்பான
வாழ்த்துக்களாக…
#Sanjana chayya

image


எப்படி உடம்பைக் குறைக்கலாம்?
இதோ அதற்கான வழிமுறைகள்!
1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள்குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.
2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.
3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும்.கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.
5. இது தவிர பப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.
6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.
7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச்சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.
8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.
9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரியசிறந்த வழிமுறைகளாகும்.மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும்ஒரு வழிமுறைகளே.. உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன.இயற்கையாய் இயற்கையோடு வாழ..!இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!+++++++++++++++++++++++++++++++பொது நலம் கருதி வெளியிடுவோர் :-
#sanjana chayya

image


காலத்தை கடந்து நிற்கும் அதிசயங்கள்!!.
இன்றும் இது போன்ற அதிசயங்களை நாம் கட்ட இயலாது. இவற்றை கட்டியவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு கட்டவில்லை. அவர்கள் தாய் மொழியில் கணிதம், அறிவியல் பயின்று தான் இந்த அழியாத அற்புதங்களை கட்டினர். ஆங்கிலம் படித்தால் தான் சாதிக்க முடியும் என்று சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டனர்சிலர். மாயையில் விழுந்த மக்களும் அதை நம்பினர்.உண்மையான சாதனைகள் அவரவர் தாய் மொழியில் படித்தால் மட்டுமே சாதிக்கமுடியும். அதற்கான சான்றுகள் ஏராளம்.ஆகவே தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்போம் . புதிய சாதனைகள் படைப்போம். வாழ்க தமிழ்!
#sanjana chayya

image


This post is pressed by Chikoo

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s